ஹரியாணாவில் மூடப்பட்டது; கோவாவில் திறக்கப்படுகிறது

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குழப்பம் நிலவி வருகிறது.
ஹரியாணாவில் மூடப்பட்டது; கோவாவில் திறக்கப்படுகிறது
ஹரியாணாவில் மூடப்பட்டது; கோவாவில் திறக்கப்படுகிறது


பனாஜி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குழப்பம் நிலவி வருகிறது.

ஹரியாணா, ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், சில பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலங்களில் தொடர்ந்து பள்ளிகள் இயங்குவது குறித்த பெரும் கேள்வி எழுந்துள்ளது.

ஹரியாணாவில் இந்த மாதத் துவக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சுமார் 10 ஆசிரியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 30 வரை பள்ளிகள் மூடப்படுவதாக ஹரியாணா மாநில அரசு நேற்று அறிவித்தது.

இதையும் படிக்கலாமே.. ஜோ பைடன் 78!

இந்த நிலையில், கோவாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அதேவேளையில், கரோனா தடுப்பு முறைகளை பள்ளிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கோவா அரசு வலியுறுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஒரே நாளில் பள்ளிக்கு வரவழைக்காமல், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் ஒரு நாளிலும், அடுத்த எண்ணிக்கையிலான மாணவர்களை மறுநாளிலும் பள்ளிக்கு வரவழைக்கும் வகையில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com