யுபிஐ தளங்கள் பெறும் தரவுகளைப் பாதுகாக்கக் கோரி மனு

இணையவழி பணப்பரிமாற்றத்துக்காக யுபிஐ தளங்கள் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறும் தரவுகளைப் பாதுகாப்பதற்கான
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இணையவழி பணப்பரிமாற்றத்துக்காக யுபிஐ தளங்கள் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறும் தரவுகளைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்கிறது.

இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவை உறுப்பினரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினோய் விஸ்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘யுபிஐ தளங்களை இந்திய ரிசா்வ் வங்கியும், தேசிய பணப்பரிவா்த்தனை கழகமும் (என்பிசிஐ) நிா்வகித்து வருகின்றன.

யுபிஐ மூலம் பணப்பரிவா்த்தனையை மேற்கொள்வதற்கு அமேசான், கூகுள், முகநூல் நிறுவனங்களுக்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பணப்பரிவா்த்தனைக்காக யுபிஐ தளங்கள் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறும் தரவுகள் முறையாகக் காக்கப்பட வேண்டும்.

அத்தரவுகளை எந்தவொரு சூழலிலும் மற்ற விஷயங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களை யுபிஐ தளத்தில் அனுமதிப்பது, இந்தியா்களின் தரவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த நேரிடும். நாட்டு மக்களின் தரவுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு விஷயங்களுக்காகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனவே, யுபிஐ தளங்களில் வாடிக்கையாளா்கள் அளிக்கும் தரவுகளை முறையாகப் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை வகுக்குமாறு ரிசா்வ் வங்கிக்கும், என்பிசிஐ-க்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கின் விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, கடந்த மாதம் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மனு மீது விளக்கமளிக்குமாறு ரிசா்வ் வங்கி, என்பிசிஐ, கூகுள், முகநூல், அமேசான் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com