பாரிஸ் ஒப்பந்த இலக்குகளைக் கடந்து இந்தியா பயணம்: ஜி20 மாநாட்டில் மோடி

​பாரிஸ் ஒப்பந்த இலக்குகளைப் பூர்த்தி செய்ததோடு அல்லாமல், அதையும் கடந்து இந்தியா பயணிப்பதாக ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒப்பந்த இலக்குகளைக் கடந்து இந்தியா பயணம்: ஜி20 மாநாட்டில் மோடி


பாரிஸ் ஒப்பந்த இலக்குகளைப் பூர்த்தி செய்ததோடு அல்லாமல், அதையும் கடந்து இந்தியா பயணிப்பதாக ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி20 உறுப்பினர் நாடுகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது:

"நாம் எல்இடி விளக்குகளைப் பிரபலப்படுத்தியுள்ளோம். இது ஆண்டுதோறும் 38 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்கிறது. உஜ்ஜாவாலா திட்டத்தின் கீழ் 8 கோடி வீடுகளுக்கு புகையில்லா அடுப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது உலகில் மிகப் பெரிய தூய்மையான ஆற்றல்களை இயக்குவதில் ஒன்றாகும்.

சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழும் எங்கள் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டும், எனது அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றாலும் குறைந்த கார்பன் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வளர்ச்சி நடைமுறைகளை இந்தியா ஏற்றுக்கொண்டது.     

எங்களது வனப்பகுதிகள் விரிவடைகின்றன. சிங்கம் மற்றும் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. 2030-க்குள் 2.6 கோடி ஹெக்டர் சீரழிந்த நிலங்களை மீட்டெடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்.  

அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை மெட்ரோ, நீர் வழி போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றால் உருவாக்குகிறோம். வசதிக்காக மட்டுமின்றி, தூய்மையான சுற்றுச்சூழலுக்கும் அது பங்களிக்கும். இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 2022-க்கு முன்பே 175 ஜிகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இந்தியா அடைந்து விடும். தற்போது 2030-க்குள் 450 ஜிகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் அடைவதற்கான பெரிய இலக்கை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

புதிய மற்றும் நிலையான தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேலும் அதிகரிக்க இதுவே சிறந்த நேரம். ஒத்துழைப்பு மற்றும் இணைந்து பணியாற்றும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். வளர்ச்சியடையும் உலகுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதியின் பெரிய உதவி இருந்தால், ஒட்டுமொத்த உலகமும் வேகமாக வளர்ச்சியடையும். 

மனிதகுலம் செழிப்படைய, ஒவ்வொரு தனிநபரும் செழிப்படைய வேண்டும். தொழிலாளியை உற்பத்தியின் காரணியாக மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு தொழிலாளிக்கு மதிப்பளிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய அணுகுமுறையே உலகைப் பாதுகாப்பதற்கான சிறந்த உத்தரவாதமாக இருக்கும்" என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com