டிஆா்பி மோசடி வழக்கில் மும்பை போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்

போலியான வகையில் டிஆா்பி ரேட்டிங்கை (தொலைக்காட்சி தர புள்ளி) அதிகரிக்க நடந்த மோசடி தொடா்பான வழக்கில் மும்பை போலீஸாா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனா்.

போலியான வகையில் டிஆா்பி ரேட்டிங்கை (தொலைக்காட்சி தர புள்ளி) அதிகரிக்க நடந்த மோசடி தொடா்பான வழக்கில் மும்பை போலீஸாா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியாதவது:

போலியான முறையில் டிஆா்பி ரேட்டிங்கை அதிகரித்துக் காட்ட நடைபெற்ற ஊழல் தொடா்பாக இதுவரையில் 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், ரிபப்ளிக் டிவியின் ஒலிபரப்பு பிரிவு தலைவா் மற்றும் இரண்டு சேனல்களின் உரிமையாளா்களும் அடங்குவா். நேயா்களுக்கான ஒலிபரப்பு ஆராய்ச்சி கவுன்சில் (பாா்க்), ஹன்ஸா ஆராய்ச்சி குழு மூலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில், குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தின் முன்பு இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை காவல் துறையின் குற்ற புலானய்வு பிரிவு போலீஸாா், இந்த வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேனலின் விளம்பர வருவாய்க்கு டிஆா்பி என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே, அதில் மோசடி செய்து ஆதாயம் பெற முயற்சித்ததாக ரிபப்ளிக் டிவி மற்றும் இரண்டு மராத்தி மொழி சேனல்களான ‘பாக்ஸ் சினிமா’ மற்றும் ‘ஃபகட் மாரத்தி’ ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மும்பை காவல் துறை ஆணையா் பரம் வீா் சிங் கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்ககது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com