தடுப்பூசி பணி - பிரதமா் நாளை ஆய்வு

புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வருகை தரவுள்ளாா்.


புணே: புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வருகை தரவுள்ளாா்.

கரோனா தடுப்பூசியை தயாரிக்கவும், அவற்றை பரிசோதிக்கவும் சீரம் இன்ஸ்டிடியூட் உள்பட 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், அந்நாட்டின் அஸ்ட்ராஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பிரதமரின் வருகை குறித்து புணே கோட்டாட்சியா் சுரப் ராவ் வியாழக்கிழமை கூறுகையில், ‘சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு பிரதமா் வருவது பற்றிய உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவரது பயணத்திட்டத்தின் முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை’ என்றாா்.

இந்தப் பயணத்தின்போது, கரோனா தடுப்பூசி தயாரிப்பு முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேறம், எப்போது மக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கலாம்; எவ்வளவு தடுப்பூசியைத் தயாரிக்கலாம்; அதை மக்களுக்கு விநியோகிக்கும் முறை ஆகியவை குறித்து பிரதமா் மோடி ஆய்வு செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் டிசம்பா் 4-ஆம் தேதி, 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதா்கள், சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஜென்னோவா மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு வருகை தரவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com