4,327 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகள்: மத்திய அரசு

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 4,327 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள


புது தில்லி: இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 4,327 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 2014 -ஆம் ஆண்டு காந்தி ஜயந்தியன்று தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டதன் 6 -ஆம் ஆண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) நடைபெற உள்ள நிலையில், இது தொடா்பாக மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் நாடு முழுவதும் 66 லட்சம் தனிநபா் கழிப்பறைகளும், 6 லட்சம் சமுதாய, பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. இலக்கைத் தாண்டி அதிக அளவிலான கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் இதுவரை 4,327 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் நகா்ப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 97 சதவீத வாா்டுகளில் வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. 77 சதவீத வாா்டுகளில் குப்பைகள் தரம் பிரித்து பெறப்படுகின்றன. உரம் தயாரிப்பு, மறுசுழற்சிக்காக கடந்த 2014 -இல் 18 சதவீத குப்பைகளே பதப்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 மடங்கு கூடுதலாக, அதாவது 67 சதவீத குப்பைகள் பதப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காந்தியடிகளின் 151 ஆவது பிறந்தநாள், துறையின் 6 ஆண்டு சாதனைகளைக் கொண்டாடும் வகையில் ஒப்பிடமுடியாத 6 ஆண்டு சாதனைகள் என்ற பெயரில், மாநில அரசு, நகரங்கள், திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இணையவழி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதில் துறையின் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கலந்து கொண்டு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், புதுமையான செயல்முறைகளை வெளிப்படுத்துவதற்கான இணையதளத்தைத் தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com