தில்லி: கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

தில்லியில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சார்பில் கரோனா நோயாளிகளுக்கு பிரம்மாண்ட யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது. 
தில்லி: கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி (கோப்புப்படம்)
தில்லி: கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி (கோப்புப்படம்)

தில்லியில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சார்பில் கரோனா நோயாளிகளுக்கு பிரம்மாண்ட யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

தில்லியில் உள்ள சர்தார் படேல் மருத்துவமனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 5500 கரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் சார்பில் சர்தார் படேல் மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற யோகாசனப் பயிற்சியில் 1,200 கரோனா நோயாளிகள் பங்கேற்று ஆசனங்களை செய்தனர். இதில் கரோனா முன்களப் பணியாளர்களும் கலந்துகொண்டு யோகாசனங்களை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com