கரோனா பாதிப்பு 65.49 லட்சத்தைக் கடந்தது: பலி 1,01,782 ஆக உயர்வு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 75,829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா பாதிப்பு 65.49 லட்சத்தைக் கடந்தது: பலி 1,01,782 ஆக உயர்வு


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 75,829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து 55 லட்சத்துக்கும் அதிகமானோா் குணமடைந்தனா். அதாவது, 83.84 சதவீதம் போ் குணமடைந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 75,829 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 65,49,374-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 82,259 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 55,09,966-அதிகரித்தது. 

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் 940 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,01,782-ஆக அதிகரித்தது.

இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 37,480 பேரும், கா்நாடகத்தில் 9,119 பேரும், ஆந்திரத்தில் 5,900 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,917 பேரும், தில்லியில் 5,438 பேரும் உயிரிழந்தனா்.

நாடு முழுவதும் 9,37,625 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பெற்றுவருவோரின் விகிதம் 14.60 சதவீதமாக உள்ளது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.56 சதவீதமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, இதுவரை 7,89,92,534 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,42,131 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com