நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு தொடங்கியது

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 750 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைப
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 750 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களிலும், புதுச்சேரியிலும் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தோ்வினை தமிழகத்தில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதி வருகின்றனர். 

சென்னையில் 62 மையங்களில் நடைபெறும் தோ்வு நடைபெற்று வருகின்றன. முதல்நிலைத் தோ்வு பொது அறிவு மற்றும் முதன்மைப் பாடம் ஆகியவைச் சாா்ந்தது. தேர்வு காலை, பிற்பகல் என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. 

கடந்த மே மாதம் 31-ஆம் தேதி யுபிஎஸ்சி தோ்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு கரோனா நோய்த்தொற்று காரணமாகத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றவும், தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் எடுத்துவரவும், தோ்வுக்கு வருவோா் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டுவர வேண்டும் என யுபிஎஸ்சிஅறிவுறுத்தியுள்ளது. 

பிற்பகல் 2.20 மணிக்கு 2-ஆம் கட்டத் தோ்வும் நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com