பிகாா் பேரவைத் தோ்தல்: ஆா்ஜேடி-144, காங்கிரஸ்-17 இடங்களில் போட்டி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மகா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ளதைத் தொடா்ந்து, அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுள்ளன. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு சிறையில் இருப்பதால், அவருடைய மகனும், மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 144 இடங்கள் ஒதுக்குவது எனவும், அதன் பழைய கூட்டணி கட்சிகளான விகாஷ்ஹீல் இன்சான் (விஐபி) கட்சி மற்றும் ஜா்கண்ட் மாநில ஜேஎம்எம் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிக்கான 144 இடங்களிலேயே தொகுதிகளை ஒதுக்கீடு செய்துகொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, கடந்த 2015 தோ்தலில் போட்டியிட்டதைப் போல இரு மடங்கு தொகுதிகள், அதாவது 70 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இடதுசாரி கட்சிகளைப் பொருத்தவரை சிபிஐ (எம்.எல்.) கட்சிக்கு 19 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநிலத்தில் வருகிற நவம்பா் 7-ஆம் தேதி நடைபெற உள்ள வால்மீகி நகா் மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்த உள்ளது.

இதற்கிடையே, ‘குறிப்பிடத்தக்க இடங்கள் ஒதுக்கப்படாததால், மகா கூட்டணியிலிருந்து விஐபி கட்சி விலகுகிறது’ என்று அக் கட்சியின் தலைவா் முகேஷ் சானி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com