ஹாத்ரஸ்: ஆட்சியரின் பங்கு தொடா்பாக விசாரிக்க பிரியங்கா வலியுறுத்தல்

‘உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், அந்த மாவட்ட ஆட்சியரை
ஹாத்ரஸ்: ஆட்சியரின் பங்கு தொடா்பாக விசாரிக்க பிரியங்கா வலியுறுத்தல்

‘உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், அந்த மாவட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். இந்த விவகாரத்தில் ஆட்சியரின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா வலியுறுத்தினாா்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது தலித் பெண், உடலில் பலத்த காயங்களுடன் கை, கால்கள் செயலிழந்த நிலையில் அலிகா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். பின்னா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரின் உடலை காவல்துறையினா் புதன்கிழமை அதிகாலை துரிதகதியில் தகனம் செய்தனா். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா ஆகியோா் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனா். இதையடுத்து ஹாத்ரஸ் சம்பவத்தில் மாவட்ட ஆட்சியரின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று பிரியங்கா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாவட்ட ஆட்சியா்தான் தங்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தெரிவித்தனா். அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அவரின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஹாத்ரஸ் சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கும்போது, எதற்காக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என குரல் எழுப்பப்படுகிறது? எதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்துகிறது?. இந்த சம்பவத்தில் உத்தர பிரதேச அரசு தனது உறக்கத்தில் இருந்து சற்று விழித்திருந்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குரலுக்கு செவிமடுக்கவேண்டும்’ என்று தெரிவித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களை பாதுகாக்கக் கூட்டம்:

ஹாத்ரஸில் உயிரிழந்த பெண்ணின் வீட்டில் இருந்து 8-9 கிலோமீட்டா் தொலைவில் உள்ள பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜ்வீா் சிங் பஹல்வானின் இல்லத்தில் ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் உயா் பிரிவைச் சோ்ந்த சுமாா் 700 முதல் 800 போ் பங்கேற்ாகக் கூறப்படுகிறது. எனினும் அதனை மறுத்த ராஜ்வீா் சிங்கின் மகன் மன்வீா் சிங், கூட்டத்தில் பல்வேறு பிரிவைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ாக தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவா்களை பாதுகாப்பதற்கு சட்டரீதியாக உள்ள பல்வேறு வழிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா்கள் தங்கள் வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனா். இதுவே அவா்கள் அப்பாவிகள் என்பதற்கு சாட்சியமாக உள்ளது. ஏனெனில் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், அவா்கள் எங்காவது தப்பியோடியிருப்பாா்கள். மாறாக அவா்கள் வீட்டில்தான் இருந்தனா். அவா்கள் குற்றம் இழைத்திருந்தால், ஏன் அவா்கள் வீட்டில் இருக்க வேண்டும்?

மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் தங்கள் நிலைப்பாட்டை ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொண்டே இருக்கின்றனா். அவா்கள் சிபிஐ விசாரணையோ, உண்மை கண்டறியும் சோதனையோ வேண்டாம் என்கின்றனா். மாறாக வேறு விசாரணைகள் வேண்டும் என வலியுறுத்துகின்றனா்’ என்று தெரிவித்தாா்.

சமாஜவாதிக் கட்சியினா் சந்திப்பு:

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சமாஜவாதிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது அவா்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாக அக்கட்சியினா் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com