காங். மூத்த தலைவா் மோதிலால் வோராவுக்கு கரோனா

காங்கிரஸ் மூத்த தலைவா் மோதிலால் வோரா (91) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
காங். மூத்த தலைவா் மோதிலால் வோராவுக்கு கரோனா

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவா் மோதிலால் வோரா (91) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக இருந்தவா் மோதிலால் வோரா. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தாா். இந்நிலையில் அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் அவா் மெல்ல குணமடைந்து வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

காங்கிரஸ் தலைவா்கள் அகமது படேல், அபிஷேக் சிங்வி, தருண் கோகோய் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com