கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் பட்டியலில் தமிழகம் 4-வது இடம்!

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 70,496 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 69,06,152 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 964 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,06,490 ஆக உயா்ந்துள்ளது. எனினும், மொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு 1.54 சதவீதமாக குறைந்துவிட்டது.

அதே நேரத்தில் 59,06,070 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 85.52 சதவீதமாகும். இப்போதைய நிலையில் 8,93,592 போ் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 13.20 சதவீதம் ஆகும். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 12.94 சதமீகிதமாக உள்ளது. 

ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-இல் 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-இல் 50 லட்சமாகவும் இருந்தது. செப்டம்பா் 28-ஆம் தேதி மொத்த கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது. அக்டோபா் 4-ஆம் தேதி 65 லட்சமாக அதிகரித்தது.

கரோனா பாதிப்பு முதல் ஒரு லட்சத்தை எட்ட 110 நாள்கள் ஆனது. எனினும், அடுத்த 59 நாள்களில் 10 லட்சத்தைக் கடந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக இதுவரை 39,430 போ் கரோனாவால் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 9,675பேரும், ஆந்திரம் மாநிலத்தில் 6,128 பேரும், தில்லியில் 5,653 பேரும் கரோனாவுக்கு பலியாகினா். மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதைவிடக் குறைவாகவே கரோனா உயிரிழப்பு உள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகம் மூன்றாவது இடத்திலும், தமிழகம் நான்காவது இடத்திலும் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com