வேளாண் சட்டம்: பேரவையைக் கூட்டி விவாதிக்க ராஜஸ்தான் அரசுத் திட்டம்

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக சட்டப்பேரவையை கூட்ட ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக சட்டப்பேரவையை கூட்ட ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் அசோக் கெலாட், வேளாண் சட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சட்டப்பேரவையை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், வேளாண் சட்டங்களால் ஏற்படும் பயன்களின் சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும். இந்த சட்டங்கள் மூலம் மத்திய அரசால் எதுமாதிரியான பலனை வழங்க இயலும் என்பதை மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

எந்தவொரு விவசாய கூட்டமைப்புடனும், மாநிலங்களுடனும் கலந்தாலோசிக்காமல் விவசாய சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், இத்தகைய கருப்புச் சட்டங்களை அமல்படுத்த வேண்டியதன் உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், தேர்வுக் குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. வேளாண் சட்டங்கள் மூலம் படிப்படியாக ஏற்படும் ஆபத்துகளை விவசாயிகள் இன்னும் உணரவில்லை என்றும் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மாநில வேளாண் துறை அமைச்சர் லால் சந்த் கட்டாரியா, மத்திய அரசு முதலாளிகளை வலிமையாக்கி விவசாயிகளை வறுமையில் தள்ளுகிறது என்று குற்றம் சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com