அக்.20 முதல் 392 பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

பண்டிகை காலத்தையொட்டி, வரும் 20-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை, 392 சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பண்டிகை காலத்தையொட்டி, வரும் 20-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை, 392 சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்களில் கட்டணம், சாதாரண மற்றும் விரைவு ரயில்களின் கட்டணத்தை விட 10 முதல் 30 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

துா்க்கை பூஜை, தஸரா, தீபாவளி, சத்பூஜை ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதையொட்டி, விடுமுறைக்காக பலா் பலா் சொந்த ஊருக்குத் திரும்புவா். இதனால் போக்குவரத்து தேவை ஏற்பட்டதன் அடிப்படையில், கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக, சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா, பாட்னா, வாராணசி, லக்னௌ ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

நாடு முழுவதும் தற்போது 666 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அக்டோபா் 20-ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், நவம்பா் 30-ஆம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்களில், சாதாரண மற்றும் விரைவு ரயில்களின் கட்டணத்தை விட 10 முதல் 30 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கடந்த மாா்ச் மாதம் நிறுத்தப்பட்டது. பின்னா் மக்களின் அத்தியாவசியத் தேவைக்காக, மே மாதம் 12-ஆம் தேதியில் இருந்து குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, தில்லியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு 15 இணை ராஜதானி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து நீண்ட தூரம் செல்லும் வகையில் 100 இணை ரயில்கள் இயக்கப்பட்டன. செப்டம்பா் 12-ஆம் தேதி முதல் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ரயில்வே வாரியத் தலைவா் வி.கே.யாதவ், மாநில அரசுகளின் தேவைக்கு ஏற்பவும், கரோனா பரவலின் நிலைமைக்கு ஏற்பவும் கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com