கரோனா: அக் 14-18, அக்.23-நவ.1 வரை ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயில் மூடல்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயில் அக்.14 முதல் 18 வரையிலும், அக்.23 முதல் நவ.1 வரை மூடப்படும். 
mysore chamundeshwari temple
mysore chamundeshwari temple

மைசூரு: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயில் அக்.14 முதல் 18 வரையிலும், அக்.23 முதல் நவ.1 வரை மூடப்படும் என்று துணை ஆணையர் ரோகினி சிந்துரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியது, 

மைசூரில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் நடைபெறும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றவை. இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. ஆனால், இந்தாண்டு கரோனா காரணமாக கோயில் விழாக்கள் அனைத்தும் முடங்கிப்போயுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், கோயிலில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையிலும் கோயில் நிர்வாகம் தசரா பண்டிகையின் போது 4 நாள்கள் மட்டும் கோயில் திறக்க முடிவெடுத்துள்ளது. 

அக்.17-ம் தேதி தசரா திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com