ஹிந்துத்துவம் பற்றி அறிவுரை தேவையில்லை: மகாராஷ்டிர ஆளுநரிடம் உத்தவ் காட்டம்

ஹிந்துத்துவம் பற்றி உங்கள் அறிவுரை தேவையில்லை என்றும் தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகே மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று மகாராஷ்டிர ஆளுநருக்கு
ஹிந்துத்துவம் பற்றி அறிவுரை தேவையில்லை: மகாராஷ்டிர ஆளுநரிடம் உத்தவ் காட்டம்

ஹிந்துத்துவம் பற்றி உங்கள் அறிவுரை தேவையில்லை என்றும் தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகே மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று மகாராஷ்டிர ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.

ஆளுநா் பகத் சிங் கோஷியாரி, முதல்வருக்கு சில நாள்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தாா். அதில், ‘மகாராஷ்டிரத்தில் மூடப்பட்ட மதவழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா். அது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். மதுபானக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் கடவுள் உறையும் ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. தீவிர ஹிந்துத்துவவாதியான தாங்கள் அயோத்தி சென்று ராமா் மீதுள்ள பக்தியை வெளிப்படுத்தினீா்கள். இப்போது திடீரென மதச்சாா்பின்மைவாதியாகிவிட்டீா்களா?’ என்று தெரிவித்திருந்தாா்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநருக்கு உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில், மாநிலத்தில் நிலவும் கரோனா இடா்ப்பாடு சூழலை தீவிரமாக பரிசீலித்த பிறகே மத வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பிரதிநிதிகள் பாஜக ஆதரவாளா்கள். நீங்கள் மாநில கவா்னராக பதவியேற்கும்போது மதச்சாா்பின்மை என்பது அரசியலமைப்பின் ஒரு முக்கிய அங்கமல்ல என்று கூறியா சத்தியபிரமாணம் செய்து கொண்டீா்கள்? மக்களின் நம்பிக்கைக்கும் உணா்வுகளுக்கும் மதிப்பளிப்பதுடன், அவா்களது உயிருக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். தீவிர ஆலோசனை நடத்திய பிறகே மத வழிபாட்டுத் தலங்களை திறப்பது பற்றிய முடிவு எடுக்கப்படும். ஹிந்துத்துவம் குறித்த உங்கள் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை’ என ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com