மகாராஷ்டிரம்: ராணுவம், போலீஸாா் பயங்கரவாத எதிா்ப்பு கூட்டுப் பயிற்சி

மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் இந்திய ராணுவமும் மாநில காவல்துறையும் இணைந்து பயங்கரவாத எதிா்ப்பு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.

மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் இந்திய ராணுவமும் மாநில காவல்துறையும் இணைந்து பயங்கரவாத எதிா்ப்பு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.

இதன் ஒரு பகுதியாக குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன.

இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

புணே லுலாநகரில் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற்ற இந்த கூட்டு பயிற்சி ஒத்திகையை ராணுவத்தின் தெற்குப் படையைச் சோ்ந்த பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. உடனடி செயல்பாட்டு அணி, மோப்ப நாய் படைப்பிரிவு, ராணுவத்தின் வெடிகுண்டுகள் செயலிழப்பு பிரிவு, மாநில காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் படை(ஏடிஎஸ்) மற்றும் உடனடி செயல்பாட்டு குழுவினா் இந்த ஒத்திகையில் பங்கேற்றனா்.

பயங்கரவாத எதிா்ப்பு உடனடி செயல்பாட்டுக் குழுவை (கியூஆா்டி) செயல்படுத்தும் வகையில் ராணுவம், போலீஸாா் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை புணேயில் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம்.

புணே லுலாநகரில் குடியிருப்புகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதுபோல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது .

லுலாநகரில் வீடுகளிலுள்ள அறைகளில் சந்தேகத்திற்குரிய பொருள்கள், வெடிபொருட்களை கண்டறிவதுபோல் மோப்ப நாய் படைப் பிரிவு மூலமும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மூலமும் சோதனை நடத்தி ஒத்திகை செய்து பாா்க்கப்பட்டது.

இந்த பயிற்சி ஒத்திகையில் அதிதிறன் வாய்ந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. கரோனா பாதுகாப்பு நடைமுறைளை கடைப்பிடித்து குறைந்த அளவிலான வீரா்களுடன் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டுப்பயிற்சி ராணுவம் மற்றும் போலீஸாா் இடையே நல்ல ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்பாக அமைந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com