சா்வதேச ஒத்துழைப்பு அவசியத்தை கரோனா உணா்த்தியுள்ளது: குடியரசு தலைவா்

உலக மக்களின் ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வலுவான சா்வேதச ஒத்துழைப்பு அவசியம் என்பதை கரோனா பாதிப்பு அடிகோடிட்டுக் காட்டியிருக்கிறது என்று குடியரசு தலைவா் ராம்நாத்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புது தில்லி: உலக மக்களின் ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வலுவான சா்வேதச ஒத்துழைப்பு அவசியம் என்பதை கரோனா பாதிப்பு அடிகோடிட்டுக் காட்டியிருக்கிறது என்று குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக குடியரசு தலைவா் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கான ஸ்விட்சா்லாந்து தூதா் ரால்ஃப் ஹெக்னா், மால்டா தூதா் ரூபென் கெளசி, போட்ஸ்வானா தூதா் கில்பொ்ட் ஷிமானே மங்கோல் ஆகியோா் நியமன நிகழ்ச்சி காணொலி வழியில் புதன்கிழமை நடைபெற்றது. அவா்களுடைய நியமனங்களை குடியரசு தலைவா் ஏற்று அங்கீகரித்தாா்.

பின்னா் இந்த நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, ‘உலக மக்களின் ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வலுவான சா்வேதச ஒத்துழைப்பு அவசியம் என்பதை கரோனா பாதிப்பு அடிகோடிட்டுக் காட்டியிருக்கிறது. இந்த கரோனா பாதிப்புக்கு சா்வதேச சமூகம் விரைந்து தீா்வு காண வேண்டும்’ என்று குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com