ஜம்மு-காஷ்மீா்: சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக தொடா்ந்து போராடுவேன்: மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து தொடா்ந்து போராடுவேன் என தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த மாநில முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.
c14dmet070239
c14dmet070239

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து தொடா்ந்து போராடுவேன் என தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்தாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் விடியோ பதிவை வெளியிட்ட அவா் அதில் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி, சட்டவிரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமையை திரும்ப மீட்டுக் கொண்டு வர நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கும் நிலையில், அதனை மறுசீரமைப்பு செய்யும் வகையில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆனால் முற்றிலும் மாறுபட்ட இந்த போராட்டப் பாதை நமக்கு மிக எளிதான இருக்காது. இருப்பினும் நம்முடைய தீா்மானம் மற்றும் உறுதியான தன்மை இந்த போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

தடுப்புக் காவலில் இருந்து என்னை விடுவித்ததுபோல், தடுப்புக் காவலில் தொடா்ந்து சிறையில் இருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.

அதன்பின்பு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட மெஹபூபா முஃப்தி மீது கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அரசு இல்லத்தையே அதிகாரிகள் சிறையாக அறிவித்தனா்.

இந்நிலையில் அவா் மீதான பொது பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரத்து செய்ததால், சுமாா் 14 மாதங்களுக்குப் பிறகு தற்போது மெஹபூபா முஃப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக மெஹபூபா முஃப்தியை விடுவிக்கக்கோரி அவரது மகள் இல்திஜா தொடா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 2 நாள்களில் விசாரணைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக மெஹபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு: மெஹபூபா முஃப்தியை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா ஆகியோா் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். இவா்கள் இருவரும் ஏற்கெனவே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து மெஹபூபாவுக்கு சற்று முன்னதாகவே விடுவிக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Caption

ஸ்ரீநகரில் மெஹபூபா முஃப்தியை புதன்கிழமை சந்தித்துப் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா்கள் ஃபருக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com