பிரதமர் மோடியிடம் சொந்தமாக கார் இல்லை; கடனும் இல்லை

பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துகள் கடந்த 15 மாதங்களில் 36.53 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடியிடம் சொந்தமாக கார் இல்லை; கடனும் இல்லை
பிரதமர் மோடியிடம் சொந்தமாக கார் இல்லை; கடனும் இல்லை

பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துகள் கடந்த 15 மாதங்களில் 36.53 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அவர் தனது மாத வருவாயில் பெரும் பகுதியை சேமித்து வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில் போட்டு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தாமாக முன் வந்து தமது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1,39,10,260-ல் இருந்து ரூ.1,75,63,618 ஆக அதாவது 26.26 சதவீதம் உயர்ந்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி தனது சொத்து மதிப்புகள் குறித்து அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தாமாக முன்வந்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துகள் மதிப்பு உயர்ந்திருப்பதில், முக்கியக் காரணியாக அவரது மாத வருவாயில் பெரும்பகுதி சேமிப்பாக மாற்றப்பட்டுள்ளதே என்று கருதப்படுகிறது.

அதே வேளையில், அசையா சொத்துகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏற்கனவே, அவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் சொந்தமாக ரூ.1.1 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் வீடு இருப்பதாகக் கூறியிருந்தார். 

70 வயதாகும் பிரதமர் நரேந்திர மோடி, வரிச் சலுகை பெறும் ஆயுள் காப்பீடு, தேசிய சேமிப்புப் பத்திரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். மாதம் தலா இரண்டு லட்சம் ஊதியமாக பெறும் பிரதமர் மோடியின் வங்கிக் கணக்கில் ரூ.3.38 லட்சம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2019 மார்ச் 31-ம் தேதி ரூ.4,143 ஆக இருந்துள்ளது. 

காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் மோடி வைத்திருக்கும் நிரந்தர வைப்புத் தொகை கடந்த ஆண்டு 1,27,81,574 ஆக இருந்த நிலையில், தற்போது இது ரூ.1,60,28,039 ஆக உயர்ந்துள்ளது. மோடியிடம் சொந்தமாக கார் இல்லை. அதுபோலவே கடனும் இல்லை. நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com