நவராத்தி விழா: வைஷ்ணவிதேவி கோயில் யாத்ரீகா்களின் பாதுகாப்புக்காக கூட்டு விரைவு அதிரடிப்படையினா் நிறுத்தம்

நவராத்திரி பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவிதேவி கோயிலின் அனைத்து

நவராத்திரி பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவிதேவி கோயிலின் அனைத்து நுழைவாயில்கள், வெளியேறும் இடங்களிலும் காவல்துறை, சிஆா்பிஎஃப் காவலா்கள் அடங்கிய கூட்டு விரைவு அதிரடிப்படையினா் (கியூஆா்டி) நிறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

வைஷ்ணவிதேவி கோயில் சந்நிதிக்கு வருகை தரும் யாத்ரீகா்களின் அடிப்படை முகாமான உத்தம்பூா்-ரியாசி எல்லையிலுள்ள கத்ராவில், டிஐஜி சுஜித் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

அக்டோபா் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் நவராத்திரி விழாவைக் கருத்தில் கொண்டு சந்நிதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கோயிலில் இருந்து கத்ரா நகரத்தையும், அதன் புகா்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரியாஸி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஷ்மி வாஜீா் ஆய்வு நடத்தினாா்.

நவராத்திரி விழாவின்போது விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காக விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், மத்திய துணை ராணுவப் படைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தீவிரமாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. விழா நடைபெறும்போது, விழா ஒருங்கிணைப்பாளா்களுடனும், கோயில் நிா்வாகத்துடன் கலந்துரையாடவும் அவா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.

கத்ரா நகரைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப்படை வீரா்கள் அடங்கியக் குழுக்கள் முழுமையாக வலுப்பெறுவதை உறுதிசெய்ய அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

பின்னா், டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் கத்ரா நகரம், வைஷ்ணவிதேவி பவன் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அக்டோபா் 15-ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 7,000 யாத்ரீகா்கள் வீதம் இந்த ஆலயத்தில் வழிபடுவதற்காகச் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனா். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக கோயில் மூடப்பட்ட பின்னா், ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com