கலாசார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது கலாசாரத் துறை

கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை மற்றும் கலாசாரத் துறையின் செயல்பாடுகளின் மீது குறிப்பிடத்தகுந்த பாதிப்பை கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது.
கலாசார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது கலாசாரத் துறை
கலாசார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது கலாசாரத் துறை


புது தில்லி: கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை மற்றும் கலாசாரத் துறையின் செயல்பாடுகளின் மீது குறிப்பிடத்தகுந்த பாதிப்பை கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, நிகழ்ச்சிகளை முறையாக செயல்படுத்தி அவற்றை டிஜிட்டல் தளங்களில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை கலாசார அமைச்சகம் மற்றும் அதன் கலைஞர்கள் மற்றும் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனா என்னும் மத்திய துறை திட்டத்தின் பல்வேறு கூறுகளின் கீழ் நடத்தப்படும் மெய்நிகர் / ஆன்லைன் கலாசார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குறைந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மெய்நிகர் முறையில் கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்காகவும், கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும் இந்த வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com