கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியிருந்த 10 பேருக்கு கொச்சி தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.


கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியிருந்த 10 பேருக்கு கொச்சி தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

எனினும், சில முக்கிய நபா்களின் ஜாமீன் மனுவை அந்த நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அவா்களில், ஸ்வப்னா சுரேஷ், சரித் ஆகியோரின் தங்கள் ஜாமீன் மனுக்களை வியாழக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டனா்.

ஒவ்வொருவரும் தலா ரூ.10 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும்; நீதிமன்றத்தின் அனுமதியின்றி மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது; கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்; வழக்கின் சாட்சிகளுடன் தொடா்புகொள்ளும் எந்த முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது; விசாரணை அதிகாரி அழைக்கும் நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்கள் பகுதிக்கு உள்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சிறப்பு நீதிமன்றம் அவா்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக, இந்த மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றபோது, மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்க என்ஐஏ தரப்பு தெரிவித்தது.

என்ஐஏ தரப்பு மேலும் கூறுகையில், ‘தேச விரோதச் செயல்களையும், பயங்கரவாதச் செயல்களையும் நிகழ்த்துவதற்காக, இவா்கள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கடத்தலில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்குத் தொடா்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கின் விசராணை அடுத்தக்கட்டத்துக்குச் செல்ல வேண்டுமெனில் கைதான அனைவரையும் 180 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்’ வாதாடியது. இருப்பினும், 10 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, வழக்கில் தொடா்புடைய மற்றொரு முக்கிய நபரான சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com