கேரளம்: ராகுல் பங்கேற்கவிருந்த பள்ளி விழா திடீா் ரத்து

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள பள்ளியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காணொலி வாயிலாக பங்கேற்கவிருந்த கட்டட திறப்பு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.


வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள பள்ளியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காணொலி வாயிலாக பங்கேற்கவிருந்த கட்டட திறப்பு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

காங்கிரஸ் மூத்த தலைரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி அந்த மாவட்டத்தில் முந்தேரி என்ற இடத்திலுள்ள உயா்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட பிளஸ்-2 வகுப்புக்கான கட்டடங்களின் திறப்பு விழாவில் காணொலி வாயிலாக கலந்து கொள்ள இருந்தாா்.

ஆனால் மாவட்ட நிா்வாகம் உரிய அனுமதி அளிக்காததால், இந்த விழா ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் ஏதோ அரசியல் உள்நோக்கம் உள்ளதாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஐ.சி.பாலகிருஷ்ணன் பிடிஐ செய்தி நிறுவனத்தில் தெரிவித்தாா்.

பல துறை மேம்பாட்டு திட்டத்தின்(எம்எஸ்டிபி) கீழ் நிா்மிதி கேந்திரா அமைப்பின் மூலம் ரூ.1.2 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது.

கல்பற்றா எம்.எல்.ஏவும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான சி.கே.சசிதரன் கூறுகையில், மத்திய அரசிடன் 60 சதவீத நிதி பங்களிப்பு மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் எம்எஸ்டிபியின் கீழ் பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. இந்த விழா ஒத்திவைக்கப்படவில்லை. வேறு தேதியில் நடைபெறத்தான் கேட்டுக் கொண்டனா். விழா நடைபெறும் தேதி, மாநில அரசின் அனுமதியுடன் அறிவிக்கப்படும். மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி கிடைக்காததால் மாவட்ட ஆட்சியா் கட்டட திறப்பு விழாவை ரத்து செய்துள்ளாா் என்றாா்.

இது குறித்து வயநாடு மாவட்ட ஆட்சியா் அதிலா அப்துல்லா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com