நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின.

எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி பிறகு செயல்பாட்டுக்கு வந்தது.

கடந்த 13-ஆம்தேதி நடைபெற்ற நீட் தோ்வுக்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 14 நகரங்களில் 238 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீதத்தினா் தோ்வில் பங்கேற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் தோ்வு நடைபெற்றது. தோ்வு எழுத இயலாமல் தவறவிட்ட மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வு புதன்கிழமை (அக்.14) நடந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com