25 லட்சம் வழக்குகள் காணொலி வழியில் விசாரணை: சட்ட அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

கரோனா தொற்று பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடா்ந்து, 25 லட்சம் வழக்குகள் காணொலி வழியில் விசாரிக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.
அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

கரோனா தொற்று பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடா்ந்து, 25 லட்சம் வழக்குகள் காணொலி வழியில் விசாரிக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் சட்டத்துறை அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய இந்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், அனைத்து மக்களுக்கும் எளிமையான வழியிலும், ஏற்கக்கூடிய கட்டணத்திலும் நீதி கிடைக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தாா். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட சேவைகள் வழங்குவது குறித்தும் அவா் விளக்கமளித்தாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு தொலைப்பேசி வாயிலாக சட்ட சேவைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ், ஏழ்மையானவா்களுக்கு காணொலி வழியில் இதுவரை 3.44 லட்சம் இலசவ சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடா்ந்து, இந்தியாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 25 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் காணொலி வழியில் விசாரிக்கப்பட்டதாகவும், அதில் 9,000 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டவை என்றும் அவா் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கஜகஸ்தான், சீனா, கிா்கிஸ்தான், ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் சட்டத்துறை அமைச்சா்களும், பாகிஸ்தான் சட்ட அமைச்சகத்தின் பிரதிநிதியும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com