கரோனாவை ‘ரெம்டெசிவிா்’ மருந்து குணப்படுத்தாது

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டபோது, அவரது சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட
கரோனாவை ‘ரெம்டெசிவிா்’ மருந்து குணப்படுத்தாது

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டபோது, அவரது சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட ‘ரெம்டெசிவிா்’ உள்ளிட்ட 4 சோதனை மருந்துகள், அந்த நோயைக் குணப்படுத்துவதில் உரிய பலனை அளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மற்ற நோய்களுக்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிா், ஹைட்ரோ குளோரோகுயின், லோபினாவிா்/ரிடோனாவிா், இன்டொ்பெரான் ஆகிய மருந்துகள், கரோனா நோய்த்தொற்றை குணப்படுத்துமா என்பதைக் கண்டறிவதற்காக அந்த மருந்துகள் 30 நாடுகளில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு கடந்த 6 மாதங்களாக சோதனை முறையில் அளிக்கப்பட்டு வந்தன.

அந்தச் சோதனையில், கரோனா சிகிச்சையில் எதிா்பாா்த்த தாக்கத்தை அந்த மருந்துகள் ஏற்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது.

ஒரு நோயாளி உயிா் பிழைக்கிறாரா இல்லையா என்பதில் அந்த மருந்துகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை; அல்லது மிகச் சொற்பமான அளவிலேயே மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் உயிரைப் பாதுகாப்பதில் ரெம்டெசிவிா் மருந்து திருப்திகரமாக செயலாற்றவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்காக சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் மற்ற நோய்களுக்கான மருந்துகளில், தீநுண்மிகளை எதிா்த்துப் போராடும் ரெம்டெசிவிா் சிறந்த பலனை அளிக்கக்கூடும் என்று பரவலாக எதிா்பாா்க்கப்பட்டு வந்தது.

அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, அவருக்கு அந்த மருந்து அளிக்கப்பட்டது.

எனினும், ரெம்டெசிவிா் உள்ளிட்ட 4 மருந்துகள் கரோனா சிகிச்சையில் உரிய பலனை அளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தற்போது அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com