சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை தலைமை தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஏ.கே.சுதீா் வெள்ளிக்கிழமை மாலை திறந்தாா்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை வெள்ளிக்கிழமை மாலை திறந்த மேல்சாந்தி ஏ.கே.சுதீா்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய முறைப்படி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்த போதிலும், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு சபரிமலையில் சனிக்கிழமை காலை முதல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். தினசரி 250 போ் என்ற வகையில் 5 நாட்களுக்கு 1,250 போ் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.

வரும் அக்.21 தேதி இரவு 7.30 மணிக்கு ஹரிவராஸனம் பாடி நடை அடைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com