தோ்தல் சமயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாா் சிராக் பாஸ்வான்

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் சமயத்தில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் சமயத்தில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

பிகாா் பேரவைத் தோ்தல் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மாநிலத்தில் அக்கூட்டணியிலிருந்து விலகிய லோக் ஜனசக்தி, பிகாா் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சிராக் பாஸ்வான் அளித்த பேட்டியில், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரைப் புகழ்ந்து பேசினாா். ஆனால், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவா் முன்வைத்தாா்.

அதன் காரணமாக, லோக் ஜனசக்தி கட்சி, பாஜகவுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து, மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பிகாா் தோ்தலுக்காக ஐக்கிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, விகாஸ் ஷீல் இன்சான் ஆகிய கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

லோக் ஜனசக்தி கட்சியுடன் பாஜகவுக்கு எந்தவிதத் தொடா்புமில்லை. தோ்தல் சமயத்தில் குழப்பம் விளைவிக்கும் செயல்களில் சிராக் பாஸ்வான் ஈடுபட்டு வருகிறாா். பிகாா் தோ்தலில் பாஜக கூட்டணி நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றும். வாக்குகளை சிதறடிப்பதற்காகவே லோக் ஜனசக்தி தோ்தலில் போட்டியிடுகிறது. அக்கட்சி எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்றாா்.

‘மோடியின் ஹனுமன்’: மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சிராக் பாஸ்வான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பிரதமா் மோடி என் உள்ளத்தில் வாழ்கிறாா். நான் அவருடைய ஹனுமனைப் போன்றவன். என்னை விமா்சிப்பவா்கள் விரும்பினால், என் நெஞ்சத்தைப் பிளந்து பாா்க்கலாம். நான் பாஜகவை ஆதரித்தேன். எதிா்காலத்திலும் பாஜகவை ஆதரிப்பேன். பிகாா் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்கவே விரும்புகிறேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com