டாக்டர் ஜோசப் மர் தோமா காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

டாக்டர்.ஜோசப் மர் தோமா மெட்ரோபாலிட்டன் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு  பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  
டாக்டர் ஜோசப் மர் தோமா காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: டாக்டர்.ஜோசப் மர் தோமா மெட்ரோபாலிட்டன் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு  பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சில மாதங்களுக்கு முன்பு, டாக்டர்.ஜோசப் மர் தோமா மெட்ரோபாலிட்டன் 90 வது பிறந்த நாள் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு, உரையாற்றிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. 

மேலும் "பெருநகர மனிதகுலத்திற்கு சேவை செய்த ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை மற்றும் ஏழை மற்றும் நலிந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடுமையாக உழைத்தவர். அவர் கடவளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். அவரது உன்னத லட்சியங்கள் எப்போதும் நினைவில் இருக்கும்.” என்று மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். 

மர் தோமா தேவாலயம் என்று அழைக்கப்படும் மலங்கரா மர் தோமா சிரிய தேவாலயம் கேரளாவின் பழங்கால, பூர்வீக தேவாலயங்களில் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தாமஸ் கி.பி 52 இல் இந்தியா வந்து இந்த திருச்சபையை நிறுவினார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. 

தற்போது, 21-வது மலங்கரா மெட்ரோபலிட்டன், டாக்டர் ஜோசப் மர் தோமா இந்த திருச்சபைக்கு தலைமை தாங்கி நடத்தி வந்தார், இவர் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக திருச்சபையின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதன் பிறகு அவசர காலத்திலும் மர் தோமா சர்ச் ஜனநாயக விழுமியங்களையும், தேசியவாதத்தின் உணர்வையும் நிலைநிறுத்தியுள்ளது. இத்திருச்சபை மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளதுடன், பல்வேறு சமூக நல நிறுவனங்கள், ஆதரவற்றோர் வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. 

பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற நெருக்கடியான காலங்களில் சர்ச் பல்வேறு மாநிலங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com