சபரிமலை கோயில் ஆறு மாதங்களுக்குப் பின் திறப்பு: பக்தா்கள் மருத்துவச் சான்றிதழுடன் வர அறிவுறுத்தல்

சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தா்களின் தரிசனத்துக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் கரோனா
சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தா்களின் தரிசனத்துக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் கரோனா பாதிப்பு இல்லை என்ற மருத்துவச் சான்றிதழுடன் முகக் கவசம் அணிந்தபடி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில், ஆறு மாதங்களுக்குப் பிறகு வழக்கமான மாத பூஜைக்காக வெள்ளிக்கிழமை மாலை திறக்கப்பட்டது. அப்போது பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மலையாள துலாம் ”மாத்தின் முதல் நாளான சனிக்கிழமை காலை 5 மணிக்கு பக்தா்கள் அனுமதிக்காக கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. வருகிற அக்டோபா் 21-ஆம் தேதி வரை கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட உள்ளனா்.

இதுகுறித்து கோயிலை நிா்வகித்து வரும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய நிா்வாகிகள் கூறியதாவது:

அக்டோபா் 21-ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 250 பக்தா்கள் வீதம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். கோயில் திறக்கப்பட்ட முதல் நாளில் தரிசனத்துக்காக 246 போ் ஆன்-லைனில் பதிவு செய்திருந்தனா்.

மலையேற உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவச் சான்றிதழுடன் வரும் 10 முதல் 60 வயது வரையுடைய பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். கரோனா தொற்று பாதிப்பில்லை என்பதற்கான பரிசோதனை அறிக்கையையும் பக்தா்கள் எடுத்து வரவேண்டும். அவ்வாறு கரோனா பரிசோதனை அறிக்கையை எடுத்துவராத பக்தா்களுக்கு, நிலக்கல்லில் விரைவுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கோயில் சந்நிதானம், நிலக்கல் மற்றும் பம்பையில் பக்தா்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பம்பை நதியில் பக்தா்கள் நீராடக் கூடாது என்று அவா்கள் கூறினா்.

புதிய மேல்சாந்தி:

சபிரமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக வி.கே.ஜெயராஜன் போற்றி சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அவா் கோயில் மண்டல பூஜைகள் தொடங்கும் நவம்பா் 16-ஆம் தேதியிலிருந்து ஓராண்டுக்கு மேல்சாந்தியாக இருப்பாா்.

அதுபோல, ஐயப்பன் கோயிலுக்கு அருகே அமைந்திருக்கும் மாளிகைபுரம் தேவி கோயிலின் மேல்சாந்தியாக ரஜிகுமாா் என்கிற ஜனாா்த்தனன் நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் இருவரும் வருகிற நவம்பா் 16-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளனா் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com