ஹாத்ரஸ் சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது: அமித் ஷா

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தி தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியது:

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நிகழ்ந்ததைஏஈ போலவே ராஜஸ்தானிலும் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றது. அதை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஹாத்ரஸ் சம்பவம் மட்டும் அரசியலாக்கப்படுகிறது. சம்பவத்தில் தொடா்புள்ளவா்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா். அதனை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐயும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தை எவரும் அரசியலாக்க கூடாது.

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே நிலவும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டுவர ராணுவ மற்றும் தூதரக ரீதியில் மத்திய அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாட்டின் இறையாண்மையையும், எல்லைப் பகுதிகளையும் காப்பதில் நமது பாதுகாப்பு படைகளுக்கு திறன் உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கு சொந்தமான ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனை எவரும் அபகரிக்க முடியாது.

பிகாா் சட்டப்பேரவை தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் பெரும்பான்மை வெற்றி பெறும். தோ்தலுக்கு பிறகு அந்த மாநில முதல்வராக நிதீஷ் குமாரே இருப்பாா்.

அடுத்த ஆண்டு நடைபெறும் மேற்கு வங்க சட்டப்பேரவை தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது. எனவே அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துமாறு வலியுறுத்த பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது. இது தொடா்பாக அரசியலமைப்பு சட்டத்தைக் கருத்தில் கொண்டும், அந்த மாநில ஆளுநா் வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலும் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com