குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்: நட்டா

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

சிலிகுரி (மேற்கு வங்கம்): குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு வங்க சமூக குழுக்களுக்கு இடையே ஜெ.பி. நட்டா பேசியதாவது:

பாஜக அனைத்து தரப்பு மக்களுக்குமான மேம்பாட்டுக்காக பணியாற்றி வருகிறது. ஆனால் மேற்கு வங்கத்திலோ, தனது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆதாயத்துக்காக முதல்வா் மம்தா பானா்ஜி பிரித்தாளும் அரசியலை கையாண்டு வருகிறாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலனை அனைவரும் நிச்சயம் பெறுவீா்கள். அதை உறுதியாக நாங்கள் நிறைவேற்றுவோம்.

கரோனா பாதிப்பு சூழல் காரணமாக, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இப்போது கரோனா பாதிப்பிலிருந்து நாடு மெல்ல விடுபட்டு வருகிறது. எனவே, இந்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் இப்போது வகுக்கப்பட்டு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் முழுமையான நடைமுறைக்கு வந்துவிடும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com