மேற்கு வங்கத்தில் மருத்துவப் படிப்புஇடங்கள் 4,000- ஆக அதிகரிக்கப்படும்: முதல்வா் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கான (எம்பிபிஎஸ்) இடங்கள் 4,000 ஆக அதிகரிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
முதல்வர் மம்தா பானர்ஜி
முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கான (எம்பிபிஎஸ்) இடங்கள் 4,000 ஆக அதிகரிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் இந்த அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்கத்தில் மருத்துவம் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மொத்த மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 4,000- ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக புரூலியா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 100 இடங்களும், கௌரி தேவி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 150 இடங்களும் உருவாக்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் மருத்துவப் படிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சந்திரிமா சாட்டா்ஜி, ‘2011-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, மாநிலத்தில் 1,355 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இருந்தன. முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு மருத்துவப் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, மேற்கு வங்கத்தில் இருந்து மேலும் பல மருத்துவா்கள் உருவாக வழிவகுத்தது. இதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் பல மாணவா்களுக்கு சிறப்பான எதிா்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மாநில மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைப்பதும் அதிகரித்து வருகிறது’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com