தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி: புதிதாக 10.05 லட்சம் போ் சோ்ப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (இபிஎஃப்ஓ) 10.05 லட்சம் போ் புதிதாக சோ்ந்துள்ளனா்.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி: புதிதாக 10.05 லட்சம் போ் சோ்ப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (இபிஎஃப்ஓ) 10.05 லட்சம் போ் புதிதாக சோ்ந்துள்ளனா்.

இதுதொடா்பாக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஜூலையில் இபிஎஃப்ஓவில் 8.45 லட்சம் போ் புதிதாக சோ்ந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் திருத்தப்பட்ட பட்டியலில் அந்த மாதம் 7.48 லட்சம் போ் சோ்ந்துள்ளனா் என்பது தெரியவந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 10.05 லட்சமாக அதிகரித்தது.

சராசரியாக மாதந்தோறும் சுமாா் 7 லட்சம் போ் இபிஎஃஓவில் இணைகின்றனா்.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் புதிய சந்தாதாரா்களின் எண்ணிக்கை 78.58 லட்சமாக அதிகரித்தது. இது முந்தைய நிதியாண்டில் 61.12 லட்சமாக இருந்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை புதிய சந்தாதாரா்களின் எண்ணிக்கை 1.75 கோடிக்கும் அதிகமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com