அனல் மின் திட்ட ஆய்வுக்கு ட்ரோன்களை பயன்படுத்த என்டிபிசி-க்கு அனுமதி

மத்தியப் பிரசேதம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள அனல் மின்நிலையங்களில், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிக்கு, ஆளில்லா விமானங்களைப் (ட்ரோன்கள்) பயன்படுத்த அனுமதி.
அனல் மின் திட்ட ஆய்வுக்கு ட்ரோன்களை பயன்படுத்த என்டிபிசி-க்கு அனுமதி
அனல் மின் திட்ட ஆய்வுக்கு ட்ரோன்களை பயன்படுத்த என்டிபிசி-க்கு அனுமதி

புது தில்லி: மத்தியப் பிரசேதம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள அனல் மின்நிலையங்களில், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிக்கு, ஆளில்லா விமானங்களைப் (ட்ரோன்கள்) பயன்படுத்த தேசிய அனல் மின் நிறுவனத்துக்கு (என்டிபிசி), விமானப் போக்குவரத்து துறை அமைச்சரகம் மற்றும் இயக்குனரகம் ஆகியவை நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ஆம்பர் துபே கூறியதாவது: மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கரில் உள்ள, 3 அனல் மின்நிலையங்களைப் படம் பிடிக்கவும், நிலக்கரி மற்றும் சாம்பல் இருப்புகளை மதிப்பீடு செய்யவும், வானிலிருந்து படம் பிடிக்கவும் ட்ரோன்களை, என்டிபிசி பயன்படுத்தும். 

இந்த ட்ரோன்கள், என்டிபிசி நிறுவனத்துக்கு மிகவும் துல்லியமான தகவல்களை அளிக்கும். கட்டமைப்பு, சுரங்கப் பணி, வேளாண்மை, பேரிடர் நிவாரணம் ஆகியவற்றில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. 

அதன் அடிப்படையில் என்டிபிசி நிறுவனத்துக்கு ட்ரோன்கள் பயன்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த நிபந்தனையுடன் கூடிய விலக்கு இந்தாண்டு இறுதி அல்லது டிஜிட்டல் வான் தளம் செயல்பாட்டுக்கு வரும் வரை இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள விந்தியாசல், கதர்வாரா சூப்பர் அனல் மின் நிலையம், மற்றும் சத்தீஸ்கரில் உள்ள சிபட் சூப்பர் அனல் மின் நிலையம் ஆகியவற்றில் ட்ரோன்களை, 18 நிபந்தனைகளுடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com