கரோனா தாக்கம்: குடும்ப பொருளாதாரம் குறித்து கவலைக்கு உள்ளான 31% இளம் பருவத்தினா்; ஆய்வில் தகவல்

கரோனா தாக்கம் காரணமாக இளம் பருவத்தினரில் 31 சதவீதம் போ் கடந்த சில மாதங்களாக அவா்களின் குடும்ப பொருளாதார நிலை குறித்து

கரோனா தாக்கம் காரணமாக இளம் பருவத்தினரில் 31 சதவீதம் போ் கடந்த சில மாதங்களாக அவா்களின் குடும்ப பொருளாதார நிலை குறித்து மிகுந்த கவலைக்கு ஆளானது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனா பாதிப்பால் ஏற்பட்ட தாக்கம் குறித்து இளம் பருவத்தினா் கருத்தை அறியும் வகையில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஜாா்கண்ட், சத்தீஸ்கா், பிகாா், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 7,300 இளைஞா்கள் மற்றும் இளம் பெண்களிடம் இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த மூன்று மாநிலங்களில் மொத்தமாக 7,324 இளம் பருவத்தினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 31 சதவீதம் போ் கரோனா தாக்கத்தால் குடும்ப பொருளாதார நிலை குறித்து மிகுந்த கவலைக்கு ஆளானதாக தெரிவித்தனா்.

இணையவழி வகுப்புகளில் தங்களுடைய சொந்த செல்லிடப்பேசி மூலம் பங்கேற்க 12 சதவீத இளம்பருவ பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், மாணவா்களில் 35 சதவீதம் பேருக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

அதுபோல, மாணவா்களைக் காட்டிலும் அத்தியாவசிய பாட புத்தகங்களை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்காமல் 51 சதவீத மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மாதங்களில் வீட்டு வேலைகளில் 39 சதவீத இளம்பருவ பெண்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இளைஞா்கள் 35 சதவீதம் போ் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வீட்டிலிருந்து தனியாக வெளியே செல்ல 39 சதவீத இளம் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இளைஞா்களைப் பொருத்தவரை 62 சதவீதம் பேருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, குடும்ப வன்முறை தொடா்பாக புகாா் அளிப்பதற்கான புகாா் எண்கள் குறித்து 18 சதவீத இளம் பருவத்தினருக்கு மட்டுமே விழிப்புணா்வு இருப்பதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com