காரீப் பருவத்தில் 159.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: மத்திய அரசு

காரீப் பருவக் காலத்தில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழகம், உத்தரகண்ட், சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து கடந்த 26ம் தேதி வரை, 159.55 லட்சம் மெட்ரிக்
காரீப் பருவத்தில் 159.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: மத்திய அரசு
காரீப் பருவத்தில் 159.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: மத்திய அரசு


புது தில்லி: காரீப் பருவக் காலத்தில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழகம், உத்தரகண்ட், சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து கடந்த 26ம் தேதி வரை, 159.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதே காலத்தில் மொத்தம் 134.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் தற்போதைய நெல் கொள்முதல் 18.61% அதிகரித்துள்ளது. இந்தாண்டு மொத்த நெல் கொள்முதல் 159.55 லட்சம் மெட்ரிக் டன்னில், பஞ்சாப் மாநிலம் மட்டும் 107.81 லட்சம் மெட்ரிக் டன் பங்களிப்பை அளித்துள்ளது. இது மொத்த கொள்முதலில் 67.57%. தற்போதைய காரிப் சந்தைக் காலத்தில் சுமார் 13.64 லட்சம் விவசாயிகள், ரூ.30,123.73 கோடி பணம் பெற்று ஏற்கனவே பயனடைந்துள்ளனர்.

மேலும், மாநிலங்கள் விடுத்த வேண்டுகோள்படி, தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்திலிருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 1247 விவசாயிகளிடமிருந்து கடந்த 26ம் தேதி வரை 1543.11 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து மற்றும் வேர்க்கடலையை ரூ.10.08 கோடி குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசு முகமைகள் கொள்முதல் செய்துள்ளன.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேம் ஆகிய மாநிலங்களில் இருந்து இதே காலக்கட்டத்தில் 76,512 விவசாயிகளிடமிருந்து 3,98,683 பருத்தி பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com