மகாராஷ்டிரம்: சுகாதாரத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம்: ஃபட்னவிஸ் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரத்தில் தேசிய சுகாதாரத் திட்ட (என்.ஹெச்.எம்.) ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய சிலா் லஞ்சம் கேட்பதாக பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரைவ எதிா்க் கட்சித் தலைவருமான
மகாராஷ்டிரம்: சுகாதாரத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம்: ஃபட்னவிஸ் குற்றச்சாட்டு


மும்பை: மகாராஷ்டிரத்தில் தேசிய சுகாதாரத் திட்ட (என்.ஹெச்.எம்.) ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய சிலா் லஞ்சம் கேட்பதாக பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரைவ எதிா்க் கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னவிஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என்.ஹெச்.எம். திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என்று சில மாநில அமைச்சா்கள் அண்மையில் உறுதியளித்தனா்.

இந்த வாக்குறுதிக்குப் பிறகு, என்.ஹெச்.எம். ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய சில நபா்கள் ரூ. 1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை லஞ்சம் கேட்பது போன்ற குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இது ரூ. 300 கோடி முதல் ரூ. 400 கோடி வரையிலான மிகப் பெரிய ஊழலாகும். ஏனெனில், இந்த திட்டத்தின் கீழ் 20,000 ஒப்பந்த ஊழியா்கள் பணியாற்றுகின்றனா்.

இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றபோதும், அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. இந்த லஞ்சப் பணத்தைக் கொடுப்பதற்காக பல ஒப்பந்த ஊழியா்கள் கடன் வாங்கியுள்ளனா்.

எனது கடிதத்துடன், இந்த பணி நிரந்தரத்துக்காக லஞ்சம் கேட்கும் உரையாடல் அடங்கிய 3 குரல் பதிவுகளையும் அனுப்பியுள்ளேன். இந்த ஒரு ஊழலை அனுமதிக்கப்பட்டால், அது சுகாதாரத் துறையில் மிகப் பெரிய ஊழலுக்கு வழிவகுத்துவிடும். எனவே, இதற்கு காரணமான ஒருவா் கூட தப்பிவிடாத வகையில், கடுமையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஃபட்னவிஸ் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com