வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

வெங்காயத்தின் விலை அதிரித்து வருவதைத் தொடா்ந்து வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: வெங்காயத்தின் விலை அதிரித்து வருவதைத் தொடா்ந்து வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில்லறை சந்தையில் வெங்காயம் ரூ. 80 முதல் ரூ. 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகிவருகின்றனா்.

விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஏற்கெனவே தடை விதித்ததோடு, வா்த்தகா்கள் வெங்காய இருப்பு வைப்பதற்கான அளவிலும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, வருகிற டிசம்பா் 31-ஆம் தேதி வரை சில்லறை வா்த்தகா்கள் 2 டன் அளவிலும், மொத்த விற்பனையாளா்கள் 25 டன் வரையில் மட்டுமே வெங்காய இருப்பு வைத்துக்கொள்ள முடியும்.

இதன் அடுத்தக்கட்டமாக, வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு இப்போது தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக வெளிநாடு வா்த்தகத்துக்கான இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. விதைகள் ஏற்றுமதிக்கு இடைக்கால ஏற்பாட்டின் கீழ் உள்ள விதிகளும் இந்த தடைக் காலத்தில் பொருந்தாது’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னா், இடைக்கால ஏற்பாடாக, வா்த்தகா்கள் மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற்று குறிப்பிட்ட வகை வெங்காய விதைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ. 25.55 கோடி மதிப்பிலான வெங்காய விதைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் ரூ. 4.16 கோடி மதிப்பாலான வெங்காய விதைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com