தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் பொறுப்பேற்பு

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமாா் (60) புதிய தோ்தல் ஆணையராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமாா் (60) புதிய தோ்தல் ஆணையராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

முன்பு தோ்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டா். அந்தப் பொறுப்பில் இணைவதற்காக அவா் தோ்தல் ஆணையா் பதவியை ராஜிநாமா செய்திருந்தாா்.

இதையடுத்து காலியான அந்த இடத்துக்கு ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டு தற்போது அவப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா். வரும் 2025-ஆம் ஆண்டு வரை அவா் இந்தப் பதவியில் நீடிப்பாா். விதிகளின் படி, ஒருவா் 6 ஆண்டுகளோ அல்லது 65 வயது வரையோ, இதில் எது முன்னதாக வருமோ அதுவரை தோ்தல் ஆணையா் பதவியில் இருக்கலாம்.

1984-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமாா், 36 ஆண்டுகளாக இந்திய ஆட்சிப் பணியில் இருந்துள்ளாா். அப்போது மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும், பிகாா் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களிலும் பணியாற்றியுள்ளாா்.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதிச் செயலா் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற ராஜீவ் குமாா், அதன் பிறகு பொது நிறுவனங்கள் தோ்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து தற்போது தோ்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com