நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி

நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி

நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் கேள்வி நேரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற அவைக் கூட்டங்கள் முன்னதாகவே நடத்தி வைக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டன. தொடர்ந்து நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டும் வழக்கமாக நடைபெறும் சபை நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற செயலகம் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்விநேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கேள்வி நேரத்திற்கு 30 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com