Maha: Thane COVID-19 tally crosses 1.26 lakh 
Maha: Thane COVID-19 tally crosses 1.26 lakh 

தாணேவில் கரோனா பாதிப்பு 1.26 லட்சத்தைத் தாண்டியது

மகாராஷ்டிராவின், தாணே மாவட்டத்தில் புதிதாக 1,487 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1.26 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவின், தாணே மாவட்டத்தில் புதிதாக 1,487 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1.26 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், பால்கர் மாவட்டத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தாணேவில் மொத்த பாதிப்பு 1,26,839 ஆக உள்ளது என்று மாவட்ட ஆட்சியரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாணே மாவட்டத்தில் தொற்றுக்கு 37 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 3,614 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை, மாவட்டத்தில் 12,881 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 1,10,344 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். மாவட்டத்தில் மீட்பு விகிதம் 87 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.85 ஆகவும் உள்ளது. 

கல்யாண் நகரில் நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கல்யாண் -429, நவி மும்பை -346, தாணே நகரம் -273 மற்றும் மீரா பயந்தர் -191 பேர் புதிதாக பாதிக்கப்ப்டடுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com