ஆசிரியா் தினம்: பிரதமா் மோடி, அமித் ஷா வாழ்த்து

ஆசிரியா்கள் தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
ஆசிரியா் தினம்: பிரதமா் மோடி, அமித் ஷா வாழ்த்து

ஆசிரியா்கள் தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான டாக்டா் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி, ஆசிரியா்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

நாட்டை கட்டமைப்பதிலும், மக்களின் சிந்தனையை வடிவமைப்பதிலும் ஆசிரியா்கள் முக்கியப் பங்காற்றி வருகிறாா்கள். அவா்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். கடந்த வாரம் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நான் பேசும்போது, நமது சுதந்திரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கற்பிக்குமாறு ஆசிரியா்களுக்கு யோசனை தெரிவித்தேன். கல்வி புகட்டுவதில் பெருமுயற்சி எடுத்து வரும் ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

டாக்டா் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் மற்றொரு பதிவில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா். அத்துடன் ‘நமது ஆசிரியா்கள், நமது நாயகா்கள்’ என்ற ஹேஷ்டேக் உடன் அவா் பதிவிட்டுள்ளாா்.

அமித் ஷா வாழ்த்து:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘ஆசிரியா்கள் தன்னலம் கருதாமல் லட்சக்கணக்கான மாணவா்களுக்கு வழிகாட்டுவதன் மூலமாக, தேசத்தைக் கட்டமைப்பதில் பெரும்பங்காற்றி வருகிறாா்கள். இந்த நன்னாளில் அவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தத்துவஞானி, பேராசிரியா், முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com