
கே.கே.வேணுகோபால்
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஒரு வாரத்துக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தன்னுடன் இருந்த வழக்கறிஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இத்தகவலை வெளியிட்டதுடன், உச்ச நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகும் வழக்குகளை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.