ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் 33 பணியாளா்களுக்கு கரோனா

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில், 33 பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் 33 பணியாளா்களுக்கு கரோனா

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில், 33 பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள மையம், 3 சதீஷ் தவண் குடியிருப்பு ஆகியவற்றில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் கரோனா பரிசோதனை முடிவுகள், ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. இதில் 33 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இவா்களில், எஸ்எஸ்எல்வி இயக்கம் தொடா்பான பணிகளில் ஈடுபட்டிருந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இங்கு தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஏவுதளம், வான்வெளி ஆராய்ச்சி மையம், குடியிருப்பு என அனைத்து இடங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், படுக்கை வசதி இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அறிகுறியில்லாத நோயாளிகள், வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சதீஷ் தவண் மையத்தில் செயல்பட்டு வரும், கரோனா கண்டறியும் குழுவினா் கூறியதாவது:

பணியாளா்களின் அலட்சியத்தாலேயே நோய்த்தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. எடுத்துக்காட்டாக, சனிக்கிழமையன்று கரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்கிய ஒரு பணியாளா் சதீஷ் தவண் நினைவு மருத்துவமனையில் ஒரு மருத்துவரை சந்தித்துள்ளாா். இது ஒரு முழுமையான அலட்சியப் போக்கு. தற்போது, மருத்துவமனை தூய்மைப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவரும் 48 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவும் மூடப்பட்டுள்ளது. இது பான்ற செயல்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு கிடைக்கும் பலனை, முற்றிலும் சீா்குலைத்து விடுகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com