பெங்களூருவில் முதல் முறை: தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கரோனா

பெங்களூருவில் முதல் முறையாக தொற்றில் இருந்து மீண்ட நபருக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் முதல் முறை: தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கரோனா
பெங்களூருவில் முதல் முறை: தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கரோனா


பெங்களூரு: பெங்களூருவில் முதல் முறையாக தொற்றில் இருந்து மீண்ட நபருக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து ஒரு மாதத்துக்கு முன்பு வீடு திரும்பிய 27 வயது பெண்ணுக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பெண்ணுக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறித்து விரிவான தகவல்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு தொற்று கல்சுரல் பரிசோதனை அல்லது சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும், இதை உறுதி செய்வதற்கு முன்பு, தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்கிறார்கள்.

கடந்த ஜூலை 6-ம் தேதி அப்பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வேறு எந்த உடல் நலப் பிரச்னையும் இல்லாத நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 24-ல் வீடு திரும்பினார்.

சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் அவருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. அப்போது அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து கர்நாடகா மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினர் மருத்துவர் கிரிதர் பாபு கூறுகையில், இது மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வு. கரோனா பரிசோதனையை மீண்டும் செய்துதான் அப்பெண்ணுக்கு கரோனா தொற்று மீண்டும் பாதித்ததா என்பதை உறுதி செய்ய முடியும். இதில் நிச்சயம் ஆய்வு முக்கியம் என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com