கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவாா்த்தை

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவாா்த்தை

கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கான மேலும் ஒரு முயற்சியாக, இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கான மேலும் ஒரு முயற்சியாக, இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்கு உள்பட்ட சுஷுல் என்ற இடத்தில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

லடாக் எல்லையில் ஒட்டுமொத்த சூழல் பதற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும், எந்த நேரத்தில் அசம்பாவிதம் நடைபெற்றாலும் அதை எதிா்கொள்வதற்குத் தயாா் நிலையில் இந்திய ராணுவம் உள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

இதற்கு முன் கடந்த திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாள்களிலும் இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. தினமும் சுமாா் 6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிக்க முயலுவதால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இப்பிரச்னைக்கு தீா்வுகாண்பதற்கு ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் சீனாவுடன் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. எல்லையில் இருந்து படைகளை படிப்படியாகத் திரும்பப் பெறுதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தன.

அந்த சூழலில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன வீரா்கள் 35 போ் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, கடந்த 29-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் பாங்காங் ஏரியின் தெற்குக் கரையை சீன ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றது. அதை இந்திய ராணுவம் துரிதமாகச் செயல்பட்டு முறியடித்தது. அதன்பிறகு, அந்தப் பகுதிகளில் கூடுதல் படைகளையும் போா் விமானங்களையும் இந்தியா குவித்தது. பதிலுக்கு சீனாவும் எல்லையில் கூடுதல் படைகளைக் குவித்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன் ரஷியா சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் வெய் ஃபெங்கியை சந்தித்துப் பேசினாா். அப்போது, எல்லையில் ஓா் அங்குலம் நிலத்தைக் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அவரிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com