ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்:  ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதி பிரகாஷ் பாணிக்ரஹி. இவர் திங்களன்று தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஏழு நாட்களில் தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒடிசா மாநில அமைச்சரவையில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நான்காவது அமைச்சர் ஜோதி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தொழிலாளர் துறை அமைச்சர் சுஷாந்த் சிங், உயர் கல்வித்துறை அமைச்சர் அருண்குமார் சாஹூ மற்றும் கைத்தறி & ஜவுளித் துறை அமைச்சர் பத்மினி தியான் ஆகியோர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இம்மாத இறுதியில் துவங்கவுள்ள மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து உறுப்பினர்களும் கூட்டம் துவங்குவதற்கு இருநாட்களுக்கு முன்னர் கரோனா பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற்றுத்தான் கலந்துகொள்ள வேண்டும் என்று சபாநாயகர் சூர்ய நாராயண் பட்ரோ தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com